திக் திக்… விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி… காதலன் ஷாக்கிங் வாக்குமூலம்… அசாமில் பெரும் அதிர்ச்சி… பின்னணி என்ன?…

By Swetha on புரட்டாதி 29, 2026

Spread the love

கௌஹாத்தி பல்கலைக்கழக மாணவி நிமிஷா தக்கூரியா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, அசாம் மாநிலத் அதிகாரிகள் தாராபூர் பகுதியில் அமைந்துள்ள விடுதியை பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அவருடன் தங்கியிருந்த ஆசிஃப் அலி என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிமிஷா தற்கொலை செய்து கொண்டதாக ஆசிஃப் அலி கூறிவரும் தகவலின் உண்மைத் தன்மையை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக சரிபார்த்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடப்பதற்கு முன்பாக இருவரும் எங்கு சென்று வந்தார்கள், அவர்களின் நடமாட்டங்கள் மற்றும் விடுதி பதிவேடுகள் ஆகியவற்றை போலீசார் ஆழமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

   

இதனிடையே, சம்பந்தப்பட்ட விடுதியில் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தாரபூர் பகுதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.