BREAKING: “நான் பதவி விலகுகிறேன்”…. பரவும் கடிதமும்.. டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டமும்…. சற்றுமுன் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி அவர் பெயரிலான கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. ஆனால், இணையத்தில் உலா வரும் அந்த ராஜினாமா கடிதம் முற்றிலும் போலியானது என்றும், அமைச்சர் பதவி விலகவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளன.

அதேவேளையில், நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தார்மீக அடிப்படையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.