AC பயன்படுத்த புதிய விதிமுறை…. இனிமேல் குறைக்கவோ, கூட்டவோ முடியாது… மத்திய அமைச்சர் அதிரடி தகவல்..!!

By Soundarya on ஆனி 11, 2025

Spread the love

ஏசியின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். இதன்படி 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் குறைக்கவும், 28 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரிக்கவும் முடியாது. காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்களிலும் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது நாடு முழுவதும் ஏசி பயன்பாடு அதிகரிப்பதால் கோடைகாலத்தில் மின்சார தேவையும் அதிகரித்திருப்பதாகவும், மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு ஏசிக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.  எனவே, இனிமேல் ஏசிகளில் கூலிங் வெப்பநிலை குறைந்தபட்சம் 20° செல்ஸியஸ், அதிகபட்சம் 28° செல்ஸியஸ் என்ற அளவில் மட்டுமே வைத்து ஏசியை உருவாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.