பெங்களூரு தொட்டபிடரகல்லு பகுதியில் உள்ள நந்தினி பால் கடையை நடத்தி வரும் விஜயம்மா, கடந்த புதன்கிழமை அதிகாலை 5:10 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தி, அவர் அணிந்திருந்த 25 கிராம் தாலிச் செயினைப் பறித்துச் சென்றனர்.
இந்த திடீர் தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயம்மா சத்தம்பட்டு கூச்சலிட்டபோதும், அதற்குள் அந்தப் பதட்டமான சூழ்நிலையைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தங்க நகையுடன் தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2087873049324335490/video/1
இதுகுறித்து பீன்யா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விஜயம்மா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
