“டிரைவரை கொன்னுடுங்க… காசு தர முடியாது…” பெண்ணின் காலை உடைத்து…! மருத்துவ செலவு கேட்ட குடும்பத்தினரிடம் சினிமா தயாரிப்பாளர் அலட்சியம்… வைரல் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 13, 2026

Spread the love

ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் பிரபல தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் பொம்மா கே.முரளி என்பவரின் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது திடீரெனக் காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த கொடூர விபத்தில் அந்தப் பெண்ணின் கால் முறிவு அடைந்து, பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்காக அதிகப் பணம் தேவைப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காரின் உரிமையாளரான தயாரிப்பாளர் பொம்மா கே.முரளியை அணுகி மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்டுள்ளனர். ஆனால், காரின் உரிமையாளரான அவர், சிறிதும் மனிதாபிமானமின்றி, “என்னால் பணம் தர முடியாது; விபத்து ஏற்படுத்திய டிரைவரை வேண்டுமானால் கொன்றுவிடுங்கள்” என அருவருக்கத்தக்க வகையில் பதிலளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அபிட்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.