70 நிமிடங்களில் 21 குண்டுகள்… குஜராத் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த பயங்கர சதி… ஒரே நேரத்தில் 38 பேருக்கு தூக்கு…!

Spread the love

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெறும் 70 நிமிட இடைவெளியில் 14 முக்கிய இடங்களில் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த கோரமான சங்கிலித் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 அப்பாவி பொதுமக்கள் தங்களின் உயிரை இழந்தனர்; 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மனிதநேயமற்ற முறையில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவமனைகளையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. 2002 குஜராத் கலவரத்திற்கு பழிவாங்கும் நோக்கில், தடை செய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பின் ரகசிய முகாமில் திட்டமிடப்பட்டு, ‘இந்தியன் முஜாஹிதீன்’ பயங்கரவாத அமைப்பால் இந்த சதிச்செயல் அரங்கேற்றப்பட்டது வழக்கு விசாரணையில் அம்பலமானது.

இந்த கொடூர வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இதனை ‘அரிதினும் அரிதான வழக்கு’ என வகைப்படுத்தி, 2022 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த கடுமையான தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஓய்.காக்ஜே மற்றும் சமீர் தவே ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்து, சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனைகளையும் உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளின் துணிகரமான மற்றொரு குற்றச்செயலும் வெளிச்சத்திற்கு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் 24 பேர், அங்கிருந்து தப்பிப்பதற்காக சுமார் 213 அடி நீளத்திற்கு ரகசிய சுரங்கம் தோண்டிய அதிர்ச்சி உலகிற்கு தெரியவந்தது. எனினும், சிறைத்துறையினரின் தீவிர கண்காணிப்பால் இந்த சுரங்கப் பாதை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் தப்பிக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டது. தற்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இறுதித் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள மிக முக்கியமான நீதியாகப் பார்க்கப்படுகிறது.

SATHISH R

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago