பீகார் மாநிலம் சிவ்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் மஞ்சி (22), தனது மாமாக்களான ராஜேஷ் மஞ்சி மற்றும் துபானி மஞ்சி ஆகியோருடன் மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்த மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தி பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களிடையே பேச்சு அரசியல் குறித்துத் திரும்பியது.
சங்கர் மஞ்சி ஆர்ஜேடி (RJD) கட்சியின் ஆதரவாளராகவும், அவரது மாமாக்கள் இருவரும் நிதிஷ் குமாரின் ஜேடியு (JDU) கட்சியின் ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளனர். பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜேடியு வெற்றி பெற்றதாலும், ஆர்ஜேடி தோல்வியைத் தழுவியதாலும், தேர்தல் முடிவுகள் குறித்துக் குடிபோதையில் மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவாதம் ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் சென்றதால், ஆத்திரமடைந்த ராஜேஷும் துபானி மஞ்சியும் சேர்ந்து, சங்கரை அருகிலுள்ள சேற்றுப்பகுதிக்கு இழுத்துச் சென்று மாறி மாறி மிதித்துள்ளனர். இந்தச் சண்டையைப் பற்றி அப்பகுதியினர் தகவல் கொடுத்ததால், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மிதிபட்டதில் சங்கர் மூச்சுத் திணறி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து, சங்கரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…