அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா?… வளர்த்த மருமகனை போதையில் வெட்டிக் கொன்ற மாமா… பெங்களூருவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 14, 2026

Spread the love

பெங்களூருவின் ஹெசரகட்டா பகுதியில் சிறிய தகராறு காரணமாக 15 வயது சிறுவன் கிருஷ்ணா என்பவரை அவனது மாமா மோகன் (40) கட்டத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். மதுபோதையில் இருந்த மோகன், சிறுவன் தன்னிடம் போதுமான மரியாதை காட்டவில்லை எனக் கருதி கோபமடைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இறந்த சிறுவனின் தந்தை முனிராஜ் சிறுவயதிலேயே இறந்துவிட்ட நிலையில், தாயும் பிரிந்து சென்றுவிட்டதால், மரவெட்டியாக வேலை செய்யும் மோகன்தான் தனது மருமகன் கிருஷ்ணாவை வளர்த்து வந்துள்ளான். மோகனின் மனைவியும் பிரிந்து சென்றதால், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

   

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன், கத்தியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கொலைக்குப் பிறகு விஸ்வநாதபுரா காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்த மோகன் மீது சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.