“கள்ளக்காதலனுடன் மொட்டை மாடியில் அம்மா”… 16 வயது மகள் கண்ட அந்த ஒரு காட்சி…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்….!

Spread the love

சென்னை ராமாபுரத்தில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள செந்தமிழ் நகர் அனெக்ஸ் பகுதியில் வசித்து வந்த 37 வயதான புஷ்பா என்ற பெண்மணி, கடந்த 10 ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து தனது 16 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், புஷ்பாவிற்கும் அவரது உறவினரும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த டெய்லருமான கார்த்திக் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய பழக்கம் இருந்து வந்துள்ளது.

சம்பவம் நடந்த இரவு, கார்த்திக் வழக்கம்போல புஷ்பாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கார்த்திக், புஷ்பாவைத் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த புஷ்பா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொலையைச் செய்த பின் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அன்று இரவு 11 மணி அளவில் தனது அம்மாவும் கார்த்திக்கும் மாடியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த மகள், அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால் காலையில் மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது தனது தாய் முகம் மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் அலறியுள்ளார். மகளின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த ராமாபுரம் போலீசார், புஷ்பாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆத்திரத்தில் கார்த்திக் புஷ்பாவை அடித்துக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த கார்த்திக்கைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினரே பெண்ணைக் கொலை செய்த இச்சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

15 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

24 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

35 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

42 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

1 மணத்தியாலம் ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago