நள்ளிரவில் வந்த அந்த ஒரு புத்தகம்… இரவில் தூங்க முடியவில்லை… புலம்பும் எதிர்க்கட்சி MLA-க்கள்…. சட்டப்பேரவையில் வெடித்த புதிய சர்ச்சை…!

By Nanthini on ஆவணி 25, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்பாக அரசால் வழங்கப்படும் கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகம் தவெக அமைச்சர்களின் தாமதமான நடவடிக்கையால் முந்தைய நாள் இரவிலேயே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கிடைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக, இந்த புத்தகத்தை முன்கூட்டியே படித்து ஆராய்ந்த பிறகே சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் காரசாரமான விவாதங்களையும் குறிப்புகளையும் முன்வைக்க முடியும்.

ஆனால், கொள்கை விளக்கப் புத்தகம் மிகத் தாமதமாக நள்ளிரவில் வழங்கப்படுவதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரவு முழுவதும் கண்விழித்துத் தூக்கமின்றி குறிப்புகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும், இதனால் தங்களின் இரவு நேர நிம்மதியான தூக்கம் பறிபோய்விட்டதாகவும் எம்.எல்.ஏ-க்கள் பேரவையில் வேதனையுடனும் கொந்தளிப்புடனும் தெரிவித்துள்ளனர்.