சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அதன் பிறகு ஒரு சில மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்துக்கு கார்டியாக அரெஸ்ட் என்று சொல்லப்படும் இருதயம் முடக்கம் ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.
இந்தச் செய்தி சின்னத்திரை திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் ஸ்ருதியின் கணவர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பயணங்கள் முற்றிலும் குணமாக்கும் ‘ எனக்கூறி காட்டில் மிருகங்களை புகைப்படம் எடுக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அதில் அவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காண்பித்து தான் மறக்க முடியாமல் தவிக்கும் நினைவுகளையும் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு ஆறுதல்களை கமெண்ட் பக்கத்தில் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…