‘நீயா நானா’ கோபிநாத் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத்.இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதையும் கடந்து நடிகராக நிமிர்ந்து நில், திருநாள் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் பொருந்தும் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவதும் தான் இவரது தனித்துவம் என்றே கூறலாம். இவர் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஜெயா டிவி ,என் டி டி வி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய, இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சி ‘நீயா நானா’வில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் தினமும் ‘நல்லதா நாலு விஷயம்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிடுகிறார். அதை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.நீயா நானா கோபிநாத் அவர்களுக்கு கடந்த 2010ல் துர்கா என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு வெண்பா என்ற மகள் இருக்கிறார். தற்பொழுது கோபிநாத் விழா மேடை ஒன்றில் தனது மனைவிக்கு ப்ரொபோஸ் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…