பதறவைக்கும் கொடூரம்..! “பிரசவ வலி தாங்க முடியாமல்” கத்தியால் தன் வயிற்றையே கிழித்துக்கொண்ட கர்ப்பிணி.. வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ஒன்பது மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் பிரசவ வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வலியின் வேதனையைத் தாங்க முடியாமல் நிலைதடுமாறிய அவர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துத் தனது வயிற்றைத் தானே கிழித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் வயிற்றிலிருந்த குழந்தையை வெளியே எடுக்க அவர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது கணவர், ரத்த வெள்ளத்தில் மனைவி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயும் குழந்தையும் தற்போது உயிருடன் இருந்தாலும், இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.