“ஒய் பொண்டாட்டி” குரோஷியை தொடர்ந்து இப்போ உமைருமா..? மாதம்பட்டியை பங்கமா கலாய்க்குறாங்களே..!!

By Soundarya on புரட்டாதி 8, 2025

Spread the love

விஜய் டிவியில் மிக பிரபலமான மற்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பும்படியான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. கோவை மாதம்பட்டியை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் ரங்கராஜ் தற்போது இந்த நிகழ்ச்சி நடுவராக பங்கேற்று வருகிறார். சமீப காலமாக இணையத்தில் இவர் பெயர் தான் டிரெண்டிங்கில் உள்ளது. காரணம் இவர் முதல் மனைவியுடன் வாழும் பொழுதே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவைஇரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது தான். அதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி கர்ப்பமாகிவிட்டதாகவும், கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் சில தினங்களுக்கு முன்பாக போலீசில் புகார் கொடுத்தார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Umair Ibn Lateef (@mir.umair.official)

இந்த நிலையில் சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பொண்டாட்டி என்று கூப்பிட்டு பேச வீடியோவையும்  வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில் தான் எழுந்தது, குளித்தது, சாப்பிட்டது, வேலைக்கு செல்வது என பல விஷயங்களை ரங்கராஜ் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதை கலாய்ப்பது போன்று குவித்துக் கோமாளி புகழ் குரோஷி தன்னுடைய மனைவிக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.

   

இது இணையத்தில் வைரலாகி தொடர்ந்து பலரும் இதே போல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இருந்து இந்த வாரம் வெளியேறிய உமர் தன்னுடைய எலிமினேஷனை மாதம்பட்டி ரங்கராஜ் பாணியில் பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது