சூர்யாவும் இல்ல தனுஷும் இல்ல.. முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது என் கணவர் தான்.. ஆதாரத்துடன் பிரபல நடிகை வெளியிட்ட பதிவு..!

By Nanthini on சித்திரை 28, 2025

Spread the love

நடிகர் சிவகுமாரை பொறுத்தவரையில் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். அதன் பிறகு சினிமாவிலும் சீரியலிலும் அப்பாவாகவும் அண்ணன் கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் தற்போது சினிமா மற்றும் சீரியல் விட்டு விலகி உள்ளார். அதே நேரம் சிவகுமாரின் மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். சிவக்குமார் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.

முதலில் சிக்ஸ் பேக் வச்சது யாரு?.. கொளுத்திப்போட்ட சிவக்குமார்!..  சிக்கினாரு சூர்யா!… - Cinereporters

   

சமீபத்தில் தன்னுடைய மகன் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்பு யார் சிக்ஸ் பேக் வைத்தது? சூர்யாவை மருத்துவர்கள் சிக்ஸ் பேக் வைக்கக் கூடாது என்று சொன்ன பிறகும் சூர்யா வைத்தான். அவனுக்குப் பிறகும் எந்த நடிகரும் சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்று பேசி இருந்த நிலையில் சிவகுமாரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி இவர் பற்றி ட்ரோல் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. சூர்யாவிற்கு முன்பு எத்தனையோ நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்தார்கள் என்று ஆதாரத்தையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

   

Read all Latest Updates on and about சூர்யா

 

சமீபத்தில் கூட விஷால் தனுஷ் தான் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தனுசுக்கு முன்பே நடிகர் ரியாஸ் கான் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ரியாஸ் கானியின் மனைவியான நடிகை சிக்ஸ் பேஜ் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து பின்னர் திரைப்படத்தில் கட்டதுரையாக நடிகர் ரியாஸ்கான் நடித்த காட்சியை ரசிகர்கள் பகிர்ந்து தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது என் மகன் சூர்யா தான் என சிவகுமார் சொன்னதற்கு கட்டுதுறையின் புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Uma Riyaz பதிவைப் பகிர்ந்துள்ளார் (@umariyazkhan)