தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக தொலைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தா, கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்த சமந்தா, அதன் பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘யே மாயா சேசாவே’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை சமந்தா தொடங்கினார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை அவர் வென்றார். பிறகு கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் அந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாகவும் நடித்து ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி, அதர்வா ஹீரோவாக அறிமுகமான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ஜூனியர் என்டிஆர் உடன் பிருந்தாவனம், மகேஷ் பாபு உடன் தூக்குடு, எஸ் எஸ் ராஜமவுலிங்கின் ஈகா என தெலுங்கு ஸ்டார் ஆக ஜொலித்த சமந்தா கௌதம் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் ஜீவாவின் காதல் கண்மணியாக நடித்த கோலிவுட் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் 10 என்றதுக்குள்ள, சிவகார்த்திகேயனின் சீம ராஜா, தனுசு உடன் தங்க மகன் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். அடுத்தடுத்து விஜயுடன் கத்தி, தெறி மற்றும் மெர்சல் என மூன்று வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து சிம்ரன் மற்றும் திரிஷா வரிசையில் விஜயுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நடிகையாக விஜய் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். பெரிய நட்சத்திரமாக மாறிய பிறகும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அலம்பிடிக்காமல் நடிகர் திலகம் திரைப்படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரத்திலும், புஷ்பா திரைப்படத்தில் ஊர் சொல்றியா மாமா என்ற குத்துப் பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போட்டும் சினிமா மீதான தன்னுடைய காதலை சமந்தா வெளிப்படுத்தினார்.
சினிமாவில் இவர் முன்னணி நடிகையாக ஜொலித்தாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் அதன் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். விவாகரத்து பெற்ற பிறகு மையோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்ட நிலையில் சில காலம் அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். உடல் எடை மெலிந்து பல பேட்டிகளில் கண்ணீர் மல்க பேசிய சமந்தாவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதலாக இருந்து வந்தனர்.

தனது முதல் கணவர் நாகச் சைதன்யா மறுமணம் செய்து கொண்டாலும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் சமந்தா தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் சமந்தா இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு படத்திற்கு ஆறு கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் சமந்தா மொத்தம் 101 கோடி ரூபாய் சொத்து மதிப்பு வைத்துள்ளார். ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் சொகுசு பங்களாக்கள் வைத்திருக்கும் அவரிடம் Jaguar XF, Porsche Cayman GTS, Audi q7, Benz G Wagon உள்ளிட்ட விலையுயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்ததை, சம்பாதிப்பதை ஸ்கின் கேர் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறாராம்.
