“பச்சைக்கிளி முத்துச்சரம்”…. புகழ் நடிகை மரணம்”…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. சோகத்தில் தமிழ் திரையுலகம்….!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்து 1973-ல் வெளியான புகழ்பெற்ற திரைப்படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததுடன், அதன் பாடல்களும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற பாடலில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடனமாடி தமிழ்ப்Nபசிகளின் உள்ளங்களைக் கவர்ந்தவர் தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத். எம்.ஜி.ஆர் திரையுலக வரலாற்றில் இவருக்கென்று ஒரு தனி இடமுண்டு.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த 83 வயதான மேட்டா ரூங்ராத், பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரது மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், அப்படத்தின் இனிய நினைவுகளையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.