என்ன தான் பிரச்சனையோ…? இரவில் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்… பொருட்களை அடித்து நொறுக்கி நாசமாக்கிய சம்பவம்…. ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மினி டேங்க் பண்ட் பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்கள் மற்றும் பெயர்ப்பலகைகளை அடித்துநொறுக்கி நாசமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகபூப்நகர் மினி டேங்க் பண்ட் அருகே பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்குள் திடீரென அத்துமீறி நுழைந்த வாலிபர் அங்கு கடுமையான ரகளையில் ஈடுபட்டார். பூங்காவில் இருந்த இருக்கைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் வழிகாட்டும் பெயர்ப்பலகைகளை கண்மூடித்தனமாக அடித்துநொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளார்.

   

இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டவர்களின் கோரத் தாக்குதல் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. பொதுச் சொத்துக்களை நாசமாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.