“சினிமா பார்த்து கண்ணீர் வடித்தால் போதாது”…. அடுத்தடுத்து லாக்-அப் மரணங்கள்…. உண்மை இதுதான்….. முதல்வர் விஜய்யை வளைத்து தாக்கும் உதயநிதி…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அருணாச்சலம், சட்டவிரோத மதுபான விற்பனை புகாரில் தென்பாகம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல் ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் போது, எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைஞரின் மறைவைத் தொடர்ந்து, காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் கொதித்தெழுந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, காவல் நிலையத்தில் வைத்துத் தன் தலையில் போலீசார் தாக்கியதாக அருணாச்சலமே உயிருக்குப் போராடியபடி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் அண்மையில் லாக்-அப் மரணமடைந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளன.

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “போலீஸ் தனக்கு இழைத்த அநீதியைத் தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும்போது நெஞ்சம் கலங்குகிறது; விசாரணைக்குச் சென்ற இளைஞர் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் இத்தகைய சம்பவங்களின் போது கடும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதே இது போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. “மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சியினர், தவறு செய்த காவல்துறையினர் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

7 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

7 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

8 மணத்தியாலங்கள் ago