அதிமுக ICU-வில் அட்மிட்டாகும் நிலை ஏற்படும்… இபிஎஸ்-ஐ காப்பற்ற CM தான் வருவார்… உதயநிதி ஸ்டாலின்…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் இபிஎஸ் பரப்புரையின் போது, ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆம்புலன்ஸில் செல்லும் நிலையை அதிமுகவிற்கு மக்கள் உருவாக்குவார்கள் எனக் கூறிய அவர், விரைவில் ICU- வில் தான் அதிமுக அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். உங்களைக் காப்பாற்றும் (இபிஎஸ்ஐ) பணியையும் முதல்வர் ஸ்டாலின் தான் செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.