தமிழ்நாடு, வரபோகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். தற்போது அதிமுக முன்னால் எம்பி மற்றும் நடிகரமான ராமராஜன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகர் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அப்போதே செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன் பேசியது. நான் தற்போதைய அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். திமுக அரசியலில் ஏதோ ஒன்று நிச்சயம் நடக்கப்போகிறது, என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. 1998ல் எம்பி ஆக இருந்தால் நான் சும்மாதான் இருந்தேன்.
உழைப்பு கேட்ட ஊதியம் என்று சொல்வார்கள், ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை. கவுண்டமணி சொல்வது போல் அரசியல் இதெல்லாம் சகஜமப்பா. அதிமுகவை ஒன்றிணைக்க நேரம் செலவிட்டு கொண்டிருக்கும் அரசியல். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் முன்னாள் தலைவராக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் வகுத்த வழியில் செல்ல வேண்டும். எம்ஜிஆர் அவர்களின் புகழை கெடுப்பது போல் யார் நடந்தாலும் என் உயிரைக் கொடுத்து எம்ஜிஆரின் புகழை காப்பாற்றுவேன். மக்களின் தீர்ப்பில் மகேசனின் தீர்ப்பு, விஜயின் அரசியலுக்கு மக்களே தீர்ப்பு கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார் நடிகர் ராமராஜன்.
