ரூ.5000 கோடி மோசடி அதிர்ச்சி…. முதல்வருக்கும் கைது செய்யப்பட்ட பிரேம்குமாருக்கும் என்ன தொடர்பு?… கொளுத்திப் போட்ட உதயநிதி….. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 30, 2026

Spread the love

சுமார் ரூ. 5,000 கோடி நிதி மோசடி வழக்கில் தனியார் செய்தி நிறுவன இயக்குநரும், கூட்டுறவு நிதி நிறுவனத் தலைவருமான ஆர். பிரேம்குமார் கேரள காவல்துறையினரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில், கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமாருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி தி.மு.க. இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரைச் சந்தித்து பிரேம்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும், ஆளுங்கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவரது பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பிரேம்குமாருக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றால், அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏன் அவசர அவசரமாக சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டன என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்த இந்த விவகாரத்தில், த.வெ.க. தலைமையின் அரசியல் செயல்பாடுகளுக்கும் பிரேம்குமாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் எஸ்.எப்.ஐ.ஓ (SFIO) போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.