அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பணியிடமாற்றங்களில் அமைச்சர்கள் யாரும் தலையிடக்கூடாது என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பேசிய அவர், நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையைக் காக்கும் பொருட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் (PA), நண்பர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி யாரும் லஞ்சம் மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், மீறி தலையீடுகள் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் (துறைகள்) உடனடியாக மாற்றப்படும் என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற மற்றும் நேர்மையான சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகக் பார்க்கப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடுகளின் மீது நேரடி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த முடிவு அரசுத் துறைகளில் முறைகேடுகளைத் தடுப்பதோடு, நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் அமைச்சர்களின் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனமும் வெளிப்படைத்தன்மையும் அவசியமாகியுள்ளது.
