தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரபு, பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே கோட் திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. விஜயின் ஒவ்வொரு படத்தின் போதும் இசை வெளியீட்டு விழா நடைபெறும். அப்போது விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கோட் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக செய்திகள் உலா வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கோட் படத்தின் டிரைலரை இந்த மாதம் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என திட்டம் போட்டு உள்ளார்களாம். அன்று விசேஷமான பௌர்ணமி தினம் என்பதால் கோட் திரைப்படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அதே தினத்தில் தான் திமுக அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர போகிறார்கள்.

உதயநிதி துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற சலசலப்பு இருந்து வருகிறது. அப்படி ஒரு வேளை உதயநிதி துணை முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதைப் பற்றி தான் அனைவரும் பேசுவார்கள். இதனால் கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனாலும் பெரிய வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

