அவர பார்க்கும்போது இளம் வயசுல என்ன பாக்குற மாதிரியே இருக்கு.. டைரக்டர்ஸ் இவரை நோட் பண்ணி வாய்ப்பு கொடுங்க.. புகழ்ந்து பேசிய விக்ரம்..!!

By admin on ஆவணி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹரி கிருஷ்ணன் நடித்துள்ளார்.

   

தமிழ் சினிமாவின் இளம் நடிகரான ஹரி கிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீசான மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் பிரபலமானார் முன்னதாக அட்டகத்தி, மரியான் உள்ளிட்ட திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் ஹரிகிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் வட சென்னை, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களிலும் ஹரி கிருஷ்ணன் நடித்துள்ளார்.  இந்த நிலையில் மேடையில் நடிகர் விக்ரம் பேசியதாவது, ஹரி ஒரு நல்ல நடிகர்.

   

அட, இவர்தான் மெட்ராஸ் பட ஜானியா.! ஹீரோ போலிருக்கும் இவரைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்.. | Tamil360Newz

 

மெட்ராஸ் படத்திலிருந்து அவரோட நடிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும். என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட மெட்ராஸ் படத்துல ஹரி நடிச்சது ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ் டைரக்டர் ஹரியை நோட் பண்ணிக்கோங்க. அவர் பென்டாஸ்டிக் ஆக்டர். இந்த படத்துலயும் ஹரி நல்ல நடிச்சிருக்காரு. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா நான் அப்பப்போ ஹரிய பார்ப்பேன்.

Pa.Ranjith's next movie production hero is Hari Krishnan Johnny

சேது படத்துக்கு முன்னாடி இந்த விஷயம் எனக்கு வொர்க் அவுட் ஆகணும் அப்படிங்கறதுக்காக நான் ரொம்ப முயற்சி பண்ணுவேன். அதே மாதிரி ஹரி கையில கட்டைய வச்சிருப்பாரு திடீர்னு வேற வேற மாதிரி போஸ் கொடுப்பாரு. ஏதோ ஒரு காட்சி அப்படின்னு நினைக்காம ஒவ்வொரு காட்சியிலும் வேற வேற மாதிரி முயற்சி பண்ணுவாரு. ஹரியை பார்க்கும்போது இளம் வயசுல என்ன பார்த்த மாதிரியே இருந்துச்சு. ஒரு நாள் ஹரி ஒரு பெரிய நடிகரா வருவாரு. அது சீக்கிரத்துல நடக்கும் என கூறியுள்ளார்.