“வாயில் இருந்து நல்லா வருதா?… என்ன வரும் CM சார்”… மேடையிலேயே சீறிய உதயநிதி… விஜய்க்கு விழுந்த மரண அடி….!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான திமுகவின் உதயநிதி ஸ்டாலின் இடையேயான நேரடி வாதப் பிரதிவாதங்களால் சூடேறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்குச் சென்ற விஜய், திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர், “வாயில் இருந்து நல்லா வருது.. வேண்டாம்” என்று ஆவேசமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

விஜய்யின் இந்த விமர்சனத்திற்குச் சென்னையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், “சிஎம் சார் நன்றி சொல்வதற்காக திருச்சி கிழக்குச் சென்றுள்ளார். அவர் பெரம்பூரில் வெற்றி பெற்றிருந்தாலும், அங்குச் சென்று நன்றி சொல்ல வக்கில்லை. சட்டமன்றத்தில் நான் சுட்டிக்காட்டிய பிறகே அவர் திருச்சிக்குச் சென்றுள்ளார்” என்று சாடினார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக தலைவர் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் புதிய திட்டங்களை அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, இப்போதைய முதலமைச்சர் திருச்சிக்குச் சென்று ஏதாவது ஒரு திட்டத்தையாவது அறிவித்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து விஜய்யின் அரசியல் பின்னணி குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கவர்ச்சியில் தான் மக்கள் என்னை தேர்வு செய்துள்ளார்களா என்று சிஎம் சார் கோபப்படுகிறார். அப்படி இல்லை என்றால், அவர் வெற்றி பெற்றதற்கான இரண்டு காரணங்களைச் சொல்லட்டும்” என்று சவால் விடுத்தார். மேலும், “வாயில் இருந்து நல்லா வந்துவிடும் என்று சொல்கிறாரே, வாயில் என்ன வரும்? கலைஞர் மற்றும் ஸ்டாலினைப் போல இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலோ அல்லது மிசா சட்டத்திலோ கைதான வரலாறோ, மாநில உரிமைகளுக்காகப் போராடிய பின்னணியோ அவருக்குக் கிடையாது. கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களே ஆகும் நிலையில், தவெக வேட்பாளர்களின் பெயராவது அவருக்குத் தெரியுமா?” என்றும், இதனால்தான் தவெகவின் வெற்றியைத் தங்களுடைய தலைவர் ‘கவர்ச்சி அரசியல்’ என்று குறிப்பிட்டார் என்றும் உதயநிதி விளக்கமளித்தார்.

இறுதியாக, முதலமைச்சர் விஜய் எதற்கெடுத்தாலும் திமுக மீது பழிபோடுவதாகக் குற்றம் சாட்டிய உதயநிதி, “தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சரின் வாயில் இருந்து ஏதேனும் நல்ல திட்டங்கள் வருமா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை உருப்படியாக எதுவும் வரவில்லை. தூர சக்தி, கோர சக்தி, பார சக்தி என டி.ராஜேந்திரன் போல ரைமிங்காகப் பேசுவதையே விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார்” என்று எள்ளி நகையாடினார். தவெக மற்றும் திமுக இடையேயான இந்த அனல் பறக்கும் அரசியல் மோதல், வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

அடுத்த விக்கெட் காலி..! அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்த கரு.நாகராஜன்… சரியும் பாஜக கோட்டை… தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..!

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த கரு.நாகராஜன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக பாஜகவில் இருந்து அண்மையில்…

4 minutes ago

திடீர் பரபரப்பு..! 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது… தில் இருந்தா ஜெயிச்சு காட்டுங்க.. உதயநிதிக்கு நேரடி சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது தில் இருந்தால் ஜெயித்துக்…

9 minutes ago

“இதென்ன கருப்பு பணமா..?” வெளிப்படையா தெரியப்படுத்துங்க… தனியார் பள்ளி கட்டண விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்..!!

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க…

13 minutes ago

குஷியோ குஷி..! இனி பள்ளிக்கு லேட்டாக வந்தால்… பள்ளி மாணவர்களுக்கு இரவில் வந்த ஹேப்பி நியூஸ்..!!

பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் சுகன்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு…

16 minutes ago

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகை ரூ.10.. அமைச்சர் விக்னேஷ் போட்ட அதிரடி உத்தரவு… ஆடிப்போன டாஸ்மாக் ஊழியர்கள்..!!

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…

19 minutes ago

அரசியலுக்கு பிளான்..? லதா ரஜினிகாந்தின் திடீர் முடிவு… ஆரம்பிக்கப்பட்ட புதிய இயக்கம்.. பரபரப்பில் திரையுலகம்..!!

'மக்கள் மேடை' என்னும் புதிய சேவை இயக்கத்தை லதா ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும், மாநிலத்தின்…

21 minutes ago