“சிறையில் ‘Inky Pinky Ponky’ கேம்”… அடுத்து எங்கு தப்பியோட்டம்?…. உதயநிதி ஸ்டாலின் செம கலாய்…. முதல்வர் விஜய்க்கு விழுந்த அடி…!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

கோவை மத்தியச் சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கை கடுமையாக விமர்சித்துள்ளார். புழல் மற்றும் தேனிக்குப் பிறகு தற்போது கோவையில் கைதி தப்பியது காவல்துறையின் மெத்தனப் போக்கைக் காட்டுவதாகவும், இது கையாலாகாத அரசு என்பதற்குச் சான்று என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கைதிகள் சிறையில் இருந்து தப்பிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பணியிடமாற்றமும் சஸ்பெண்டும் செய்யவேண்டுமானால் முதலமைச்சர் தன்னைத்தானே தான் செய்துகொள்ள வேண்டும் என்று கிண்டலடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், ‘மெத்’ அரசின் இந்த அலட்சியப் போக்கால் மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் தொடர் நிகழ்வுகள் மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த அதிருப்தி அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.