பள்ளி வகுப்பறையில் அதிர்ச்சி…. மரம் அறுக்கும் இயந்திரத்தால் மாணவி மீது கொடூரத் தாக்குதல்…. வாலிபரின் வெறிச்செயல்…!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரங்கேறிய கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபத்தி இரண்டு வயது வாலிபர் ஒருவர் மரம் அறுக்கும் இயந்திரத்துடன் திடீரென பள்ளிக்குள் நுழைந்து, பத்தாம் வகுப்பு வகுப்பறைக்குள் அமர்ந்திருந்த கோபிகா என்ற மாணவி மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனைத் துளியும் எதிர்பாராத சக மாணவர்கள் பீதியடைந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.

கோபிகாவைக் காப்பாற்ற முயன்ற அவரது தோழி மீதும் அந்த வாலிபர் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்தத் தாக்குதலில் கோபிகாவின் முகம், தலை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், காப்பாற்றச் சென்ற தோழிக்கும் லேசான காயங்கள் உண்டாயின. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; அங்கு கோபிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

   

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காதல் விவகாரமே இந்த பயங்கரத் தாக்குதலுக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள அந்த வாலிபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது நடத்தப்பட்ட இந்த வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.