தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என மும்முறமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே தங்கள் கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டை தொட முடியாது என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக, தமிழக வெற்றி கழகம், பாஜக நெருங்கி வருவதாக பேசப்படுகிறது. நாமக்கல்லில் பேசிய இபிஎஸ், திமுக உடையது வெற்று கூட்டணி எனவும், அதிமுகவின் கூட்டணி பலமான வெற்றி கூட்டணி எனவும் பேசி இருந்தார். குறிப்பாக விஜய் கட்சி கொடியை சுட்டிக்காட்டி பேசியது அரசியல் களத்தை தற்போது சூடாக்கியுள்ளது.
