“டேய் என்னடா பண்ற”… தாயை கொலை செய்து வீட்டு வாசலில் வீசிவிட்டு சாதாரணமாக போன் பார்த்த மகன்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே KVB புறம் பகுதியை சேர்ந்த யஸ்வந்த்(24) என்பவருடைய தாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். சொந்த ஊரிலேயே பள்ளி படித்த யஷ்வந்த் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். படிக்கும்போது நல்ல மதிப்பெண்கள் பெற்ற அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கிடைத்த வேலைகளை எல்லாம் நிராகரித்து வந்துள்ளார். படிப்பு முடிந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் ஹைதராபாத் சென்றுள்ளார்.

அங்கு சென்று அறை எடுத்து தங்கிய அவர் தொடர்ந்து பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்தும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த அவருடைய செலவுக்கான பணத்தை அவரது தாய் வழங்கியுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் மகன் வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் அவரிடம் படித்து வேலைக்கு செல்லாமல் ஏன் இப்படி இருக்கிறாய் என்று தாய் கேட்டுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து யஷ்வந்த் அவருடைய வீட்டுக்கு சென்ற நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு மகன் வீட்டிற்கு வந்ததால் லட்சுமி அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்துள்ளார்.

   

அப்போது சமையலறைக்குச் சென்ற யஸ்வந்த் அங்கு இருந்த கத்தியை எடுத்து தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் உடலை வீட்டுக்கு வெளியில் வாசலில் கொண்டு சென்று வீசிவிட்டு மீண்டும் சாதாரணமாக அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தார். லட்சுமியின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் யஸ்வந்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவர் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வதால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது கொலையில் இருந்து தப்பிக்க நடிக்கிறாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.