“அண்ணாவே விஜயைப் பார்த்துதான் திமுகவை ஆரம்பிச்சாரு… உதயநிதி ஸ்டாலினின் அதிரடி நையாண்டி…!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

மதுரையில் இன்று (பிப். 14) செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விகளுக்குத் தனது பாணியில் கிண்டலாகப் பதிலளித்தார். சேலம் தவெக கூட்டத்தில் நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இந்தக் கேள்விகளை எல்லாம் அவரிடமே (விஜய்) போய்க் கேளுங்கள்” என்று சுருக்கமாகக் கூறித் தவிர்த்தார்.

தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா மற்றும் விஜய் குறித்த ஒப்பீடுகள் பற்றிய கேள்விக்கு, “அண்ணாவே விஜயைப் பார்த்துதான் திமுகவையே ஆரம்பிச்சாரு” என்று மிகக் கடுமையாகக் கிண்டல் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது கட்சி மாநாடுகளில் நடக்கும் குளறுபடிகளை உதயநிதி இவ்வாறான நையாண்டி கலந்த விமர்சனங்கள் மூலம் எதிர்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.