“ஸ்டாலினை பார்த்து கத்துக்கோங்க”…. உதயநிதிக்கு எதிராக கொதிக்கும் திமுக சீனியர்கள்…. அதிரும் அறிவாலயம்…!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

திமுக மூத்த தலைவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் இடைவெளி குறித்து பிரபல வார இதழில் வெளியான செய்தி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுக போன்ற கட்சிகள் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைத் தீவிரமாக விமர்சித்து வரும் நிலையில், களத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்பப் பல முக்கியப் பிரச்சினைகள் இருந்தும் உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் குறிஞ்சி இல்லத்திலேயே முடங்கியிருப்பது உடன்பிறப்புகளிடையேயும் கட்சித் மூத்த தலைவர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் இந்த வயதிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் சுறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் களத்தைச் சூடாக வைத்திருக்கும் சூழலில், உதயநிதியின் இந்த அமைதி கட்சித் தலைமைக்கே முரணாக இருப்பதாக மூத்த நிர்வாகிகள் குமுறுகின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்காகக் களத்தில் இறங்கிப் போராடாமல் விலகி நிற்பது, வரும் தேர்தலில் கட்சிக்குச் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும், உதயநிதி தனது பழைய சுறுசுறுப்பான அரசியல் பாணிக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்றும் அறிவாலயத்தின் பெரிய ‘தலைகள்’ தங்களது மனக்குறையை வெளிப்படுத்தி வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.