“ரூ.30 கோடி பேரம்… சிக்கிய ஆடியோ”…. அதிமுக நிர்வாகி மன்னன் விடிய விடிய கைதான பரபரப்பு பின்னணி…. அதிர்ச்சியில் அதிமுக….!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக எழுந்த குதிரை பேர குற்றச்சாட்டில், அதிமுக நிர்வாகி மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தஃபாவுக்கு அதிமுக நிர்வாகி மன்னன் இந்த தொகையை ஆசை காட்டி தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முஸ்தஃபாவின் உதவியாளரான கனி ராஜா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

முன்னதாக, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மன்னனிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தது. வாக்குப்பதிவில் ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட வைக்க இவ்வளவு பெரிய தொகையை பேரம் பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. வழக்கு விசாரணைக்குப் பிறகு ஆதாரம் மற்றும் முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் மன்னன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழக அரசியல் களம் மற்றும் அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.