BREAKING: உதயநிதிக்கு முக்கிய பதவி… திமுகவில் அடுத்த ‘பவர் சென்டர்’…. கனிமொழியுடன் அவசர ஆலோசனை….!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அண்மையில் “உதயநிதி ஸ்டாலின் தான் எதிர்காலத்தில் திமுகவை நடத்துவார்” என்று பேசியதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. தற்போது திமுக இளைஞரணி செயலாளரார் உதயநிதிக்கு, இளைஞரணியைத் தாண்டி கட்சியில் மிக முக்கியப் பொறுப்பு ஒன்று வழங்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.

குறிப்பாக, திமுகவின் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரப்பூர்வப் பொறுப்புகளை உதயநிதியிடம் ஒப்படைக்க ஸ்டாலின் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வதற்காகவும், அரசியல் நகர்வுகளைச் சரியாகத் திட்டமிடுவதற்காகவும், தனது அத்தையும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழியிடம் உதயநிதி அடிக்கடி முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள், திமுகவின் அடுத்தகட்ட அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளன.