MP பதவியில் இருந்து விலகுகிறேன்… சற்றுமுன் துரை வைகோ பரபரப்பு பேட்டி… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

மதிமுக மீதான திமுகவினரின் தொடர் விமர்சனங்களுக்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாகப் பேசிய அவர், திமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால், தானும் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யத் தயார் என்று அதிரடி சவால் விடுத்துள்ளார்.

தான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரின் பங்களிப்பு இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட துரை வைகோ, அதே சமயம், தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வந்தால் திமுகவில் ஒருவரால் கூட மீண்டும் எம்.பி. ஆக முடியாது என்றும் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்குள் வெடித்துள்ள இந்த நேரடி மோதல் போக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.