உதயநிதியும், முதல்வர் ஸ்டாலினும் சிறை செல்வது உறுதி… பரபரப்பை கிளப்பிய அதிமுக நிர்வாகி கோவை சத்யன்..!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love
தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மது நிறுவனங்களில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தது. இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில் டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய்க்கு கூடுதலாக வாங்கி திமுக அரசு 24,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் செய்த மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என அதிமுக நிர்வாகி கோவை சத்யன் பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார். மேலும் திமுக அரசும், அரசு நிர்வாகமும் மொத்தமாக தோல்வியடைந்துள்ளது என கூறியுள்ளார்.