இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் வயலில் ஒரு பெண்ணின் உடல் நிர்வாணமாக கிடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. முதலில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் கிரண் தேவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்.
திருமணத்திற்குப் பிறகு கிரண் மற்றும் அவருடைய கணவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வரதட்சணை கொடுமை வழக்கை கிரண் பதிவு செய்துள்ளார். இதனிடையே கிரண் காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் யாதவை சந்தித்துள்ளார். இருவருக்கும் நட்பு உருவாகி பிறகு இரண்டு ஆண்டுகளாக நெருங்கிய உறவிலிருந்து உள்ளனர். காலப்போக்கில் கிரண் சப் இன்ஸ்பெக்டரை திருமணத்திற்காக வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் யாதவ் கொலை செய்ய முடிவு செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு காரை ஏற்பாடு செய்து சவாரிக்கு அழைக்கிறார் என்று கூறி கிரனை அழைத்துச் சென்றுள்ளார்.
பயணத்தின் போது உடலுறவு கொண்டனர். அதற்காக யாதவ் பாலியல் துண்டுதல் மாத்திரைகளையும் எடுத்ததாக போலீசார் கூறுகின்றனர். இதனிடையே ஏற்பட்ட தகராறில் அவர் கிரனை வயலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். முதலில் இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமை என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
