ரயிலின் இருக்கைகளைச் சேதப்படுத்தி, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் இளைஞர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும், ஆனால் ஒரு சில ‘வியூஸ்’ மற்றும் லைக்குகளுக்காக ரயிலின் இருக்கைகளைப் பிடுங்கி எறிந்து அநாகரீகமாக நடந்துகொள்வது அவர்களின் முதிர்ச்சியற்றத் தன்மையையே காட்டுகிறது. இத்தகைய செயல்கள் பயணிகளுக்கு பெரும் அசோகரியத்தை ஏற்படுத்துவதோடு, நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கும் பெரிய நஷ்டத்தை உண்டாக்குகின்றன.
இப்படிப்பட்ட நபர்களுக்குச் சட்டப்படி தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இத்தகைய வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் பொதுச் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்.
इन बेवक़ूफ़ों को इसी में मजा आ रहा है. ट्रेन के सीट उखाड़ते हुए वीडियो बना रहे हैं. ऐसे मनबढ़ों का कायदे से इलाज होना चाहिए. pic.twitter.com/YocQP3q5Yg
— Priya singh (@priyarajputlive) May 2, 2026
