ரீசார்ஜ் பண்ண மாட்டியா…? வெளியே சென்ற காதலன்… ஆத்திரத்தில் காதலி செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on வைகாசி 3, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி வந்த கிரண்மயி என்ற அந்தப் பெண், சந்து என்பவருடன் கடந்த ஓராண்டாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது போனில் ரீசார்ஜ் முடிந்துவிட்டதால் காதலனிடம் பணம் கேட்டுள்ளார்; ஆனால் அவர் வேலைப்பளு காரணமாகச் செய்யாததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவாதத்தால் மனமுடைந்த கிரண்மயி, தனது காதலன் வெளியே சென்றிருந்த நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் தாயார் காதலன் மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ள நிலையில், ஒரு சிறிய ரீசார்ஜ் விவகாரம் தற்கொலையில் முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.