“அவரு எனக்கு மட்டும் தான்…” ஒரே கணவருக்காக சண்டை போட்ட 2 மனைவிகள்… பஞ்சாயத்து சொன்ன கலகலப்பான தீர்ப்பு…!!

By Devi Ramu on தை 26, 2026

Spread the love

உத்தர பிரதேச மாநிலம் அசீம் நகர் பகுதியில், ஒரே கணவனை அடைவதில் இரண்டு மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வினோதமான பஞ்சாயத்து தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட முதல் மனைவி மற்றும் காதலித்து மணம் முடித்த இரண்டாவது மனைவி ஆகிய இருவருமே கணவன் மீது உரிமை கோரி காவல் நிலையத்தை அணுகினர். சட்ட ரீதியாகத் தீர்வு காண்பதில் சிக்கல் நீடித்ததால், கிராமப் பஞ்சாயத்து கூட்டப்பட்டு வினோதமான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது.

இந்தத் தீர்ப்பின்படி, வாரத்தின் முதல் மூன்று நாட்கள் (திங்கள் முதல் புதன் வரை) கணவர் முதல் மனைவியுடனும், அடுத்த மூன்று நாட்கள் (வியாழன் முதல் சனி வரை) இரண்டாவது மனைவியுடனும் வசிக்க வேண்டும் என முடிவானது. எஞ்சியுள்ள ஞாயிற்றுக்கிழமை அன்று, அவர் தனது விருப்பப்படி யாருடன்  வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த விசித்திரமான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட கணவன் மற்றும் மனைவிகள் இருவரும் பத்திரம் மூலம் கையெழுத்திட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.