ராஜஸ்தானின் ஜோத்பூர் கிராமப்புற பகுதியில், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் காரணமாக அடுத்தடுத்து இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ-மித்ரா சேவை மையம் நடத்தி வந்த மஹிபால் மற்றும் அவரது நண்பர்கள், மூத்த சகோதரியின் ஆபாச வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் மூத்த சகோதரி கடந்த மார்ச் 20 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு இளைய சகோதரி கடந்த ஏப்ரல் 11 அன்று மஹிபால் உட்பட 8 பேர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். புகாரளித்த பின்னரும் குற்றவாளிகள் தங்களுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும், காவல்துறை வழக்குப் பதிவு செய்தும் குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மனமுடைந்த இளைய சகோதரி, குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பின்னர் விஷம் அருந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரட்டை தற்கொலை சம்பவம் ஜோத்பூர் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துப் பேசிய ஜோத்பூர் காவல் கண்காணிப்பாளர் பி.டி. நித்யா, முக்கிய குற்றவாளியான மஹிபால் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பலரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அங்குஷ் சவுத்ரி என்பவருக்கும், லலிதா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கும் இடையே…
அகமதாபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்ற இளம்பெண், ஏற்கனவே திருமணமான தனது காதலனுடன்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அண்மையில் இணையத்தில் பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகளை…
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் (Ebola Virus) மிகத் தீவிரமாகப் பரவி…
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்மிதா சதாசிவம் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்துப்…
தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், யாசகம் எடுத்துச் சேர்த்த பணத்தில் இருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை…