திக் திக்… நடுவானில் நடந்த பெரும் சோகம்… பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்… 4 பைலட்டுகள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 24, 2026

Spread the love

பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் உள்ள பெர்ணாண்டோ விமான தளத்திலிருந்து, அந்நாட்டு விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எஸ்எஃப் 260 ரக பயிற்சி விமானங்கள் நேற்றைய தினம் வானில் பறந்து பயிற்சி மேற்கொண்டன. அப்போது, எல்லைக்குட்பட்ட வானிலையில் அருகருகே பறந்த அந்த இரண்டு விமானங்களும் எதிர்பாராதவிதமாக நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.

மோதிய வேகத்தில் இரண்டு விமானங்களிலும் பயங்கரமாக தீப்பற்றி, கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் அந்த விமானங்களில் பயணித்த 4 பைலட்டுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக வேறு எந்த நபர்களுக்கும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்பதை பிலிப்பைன்ஸ் செய்தி தொடர்பாளர் கர்னல் ஆல்வின் கின்குயியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

   

வானில் விமானங்கள் மோதி தீப்பிடித்து கீழே விழும் திடுக்கிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த எஸ்எஃப் 260 ரக விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவற்றின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.