பிரபல நடிகையான அஞ்சலி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அஞ்சலி முதலில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அஞ்சலிக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, இறைவி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் அஞ்சலி நடித்துள்ளார். நடிகை அஞ்சலிக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான் இருக்காங்க. இதனால் அவரது சித்தி தான் அஞ்சலியை வளர்த்து வந்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைத்து அஞ்சலி சம்பாதித்தார். ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் பேசி அஞ்சலி தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் சித்தி தான் வைத்திருக்கிறார்.

களஞ்சியம் அப்படிங்கிற கருங்காலி படத்தோட டைரக்டர் கூட சேர்ந்துக்கிட்டு என்னை ரொம்ப கொடுமை படுத்துறாங்க என அஞ்சலி கூறினார். அதனை கேட்ட அஞ்சலியின் சித்தி என்மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டை அஞ்சலி சொல்கிறாரே நான் அப்படியெல்லாம் கிடையாது என்ன பேசி வந்தார். மற்றொருபுறம் இயக்குனர் களஞ்சியம் அவர்கள் சொல்வதெல்லாம் பொய்.

நான் அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை எடுத்தேன். 15 நாட்கள் கால் சீட் கேட்டு இருந்தேன். ஆனால் அஞ்சலி பத்து நாட்கள் தான் சூட்டிங் வந்தார். இதனால் அவரை கொஞ்சம் மிரட்டினேன். அதனை மனதில் வைத்துக் கொண்டு அஞ்சலி இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என களஞ்சியம் கூறினார். எப்படி இருக்க திடீர்னு ஒரு நாள் அஞ்சலியை காணவில்லை.

படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்திற்கு செல்கிறேன் என அஞ்சலி கூறிவிட்டு சென்றார். மூன்று நாட்களாகியும் அவர் வரவில்லை. அப்போது சோசியல் மீடியாவில் அஞ்சலியை யாரோ கடத்திட்டாங்க எனக் கூறி அவரது சித்தி மற்றும் இயக்குனரிடம் கேள்வி கேட்டு வந்தனர். அஞ்சலி தனது திறமையால் டாப் லிஸ்டில் இருக்க வேண்டிய நடிகை. ஆனால் என்னும் சினிமாவில் நினைத்தபடி ஜொலிக்க முடியவில்லை.
