பற்கள் ஆரோக்கியமாக பளபளவென்று இருக்க வேண்டுமா…? தினமும் இதைச் செய்யுங்க…

By admin on ஐப்பசி 3, 2024

Spread the love

தற்போதைய காலகட்டத்தில் கொரனாக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சிறு தானியங்கள் உணவுக்கு மாறுவது, பாரம்பரிய உணவுகளை சாப்பிடுவது என பலர் தங்களது உணவு பழக்கங்களை மாற்றி இருக்கின்றனர். உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவோ டயட் பின்பற்றுகின்றனர். இதய நோய் சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு இருக்கிறவர்கள் அவர்களுக்கு தகுந்தார் போல் பிளான் செய்து சாப்பிடுவர். ஆனால் நாம் ருசித்து சாப்பிடுவதற்கு முக்கியமாக இருப்பது பற்கள் தான். அவற்றை நாம் கவனிப்போமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும் பளபளவென்று மின்னவும் என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

   

பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்பட்டால் மட்டுமே நாம் பற்களில் கவனம் செலுத்துகிறோம். வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. பற்களை உறுதியாக ஆரோக்கியமாக வைத்திருக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமான உணவை சாப்பிடும்போது வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும். உமிழ்நீர் சுரப்பு குறையும்போது வாயில் அமிலம் உற்பத்தி அதிகமாகும்.

   

இப்படி பற்களில் அமில சுரப்பு அதிகமாக இருந்தால் பற்களில் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி பற்களின் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துள்ள காய்கறிகள் பழங்கள் நட்ஸ் வகைகள் முழு தானியங்கள் கால்சியம் அதிகம் உள்ள கீரைகள் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். ஈறுகள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு வைட்டமின் சி இ டி ஆகிய சத்துக்கள் அவசியம் தேவை.

 

கொய்யா, ஆப்பிள், எலுமிச்சை, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் சி சத்து ஈறுகளின் பாதுகாப்புக்கு உதவும். புரதச்சத்துக்களை கொண்டுள்ள சிக்கன் மீன் முட்டையின் வெள்ளை குரு போன்றவை குழந்தைகளின் ஈறுகள் ஆரோக்கியமாக உருவாகுவதற்கு உதவும். முக்கியமாக செய்யக்கூடாததாக பார்க்கப்படுவது இரவு நேரங்களில் அதிக இனிப்புள்ள பண்டங்கள்பைன் சேர்க்கப்பட்டுள்ள காபி போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பற்களின் மேற்புறத்தில் இருக்கும் முதல் அடுக்கான எனாமல் சேதமடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிகப்படியான இனிப்பு சேர்ந்த உணவுகளை சாப்பிடுவதில் இருந்து சற்று குறைத்துக் கொள்ளுங்கள். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்குமே நல்லது. இது தவிர பற்கள் பள பள என்று மின்னுவதற்கு தினமும் இரண்டு முறை பல் தேய்க்க வேண்டும்.

காலையிலும் இரவிலும் பல் தேய்ப்பதற்கு முன்பாக தினமும் ஒருமுறையாவது நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். வாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு 15 நிமிடங்கள் வைத்து பின்னர் வாயை கொப்பளிக்கும் போது வாயில் இருக்கும் தேவையில்லாத பாக்டீரியாக்கள் வெளியே செல்வதோடு வாய் துர்நாற்றத்தை போக்கி பற்கள் பலமாக இருக்க இது பெரிதாக உதவுகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இனி பற்கள் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்த தொடங்குங்கள்.