“மரண வேகம்.. நொடிப்பொழுதில் விபத்து…” இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்…. பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 29, 2025

Spread the love

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பணங்காட்டூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட்டுவிட்டு, மேட்டூர் – சேலம் பிரதான சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், கண் இமைக்கும் நேரத்தில் கோவிந்தனின் வாகனம் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் மேச்சேரி சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்த அக்கிலேஷ் மற்றும் முதியவர் கோவிந்தன் ஆகிய இருவருமே நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விதிகளைப் பின்பற்றாமல் கவனக்குறைவாகச் சாலையைக் கடப்பதும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும் இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகப் போக்குவரத்துப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.