உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரின் வசுந்தரா ரெசிடென்சியில் உள்ள ஒரு வீட்டில், இன்று மாலை சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கனுங்கோ அமித் கவுர் (40), அவரது சகோதரர் நிதின் கவுர் (45) மற்றும் அவர்களது தாயார் சுஷிலா (65) ஆகிய மூவரும் வீட்டிற்குள்ளேயே சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டில் ஏற்பட்ட தீயையும் புகையையும் கண்டு அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் ஆதித்யா ராணா, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
<
📍Vasundhara Residency, Muzaffarnagar UP:
Due to a cylinder blast, one person died after suffering severe burns, while two others died due to smoke inhalation.
pic.twitter.com/aKheN9dsNw— Deadly Kalesh (@Deadlykalesh) December 29, 2025
/div>
விபத்து நடந்த சமயத்தில், அமித் கவுரின் மனைவி மற்றும் மகள்கள் நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அவர்கள் கண்முன்னேயே வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
