ஆந்திர மாநிலத்தில் தாய் மற்றும் தந்தை இருவருமே கொடூரமான சாலை விபத்து ஒன்றில் சிக்கி, உயிருக்குப் போராடும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர விபத்தை ஏற்படுத்திய நபர்களை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், விபத்து நடந்த காரை கூட பறிமுதல் செய்யாமல், அடுத்த நாள் காலையிலேயே குற்றவாளிகளை ரகசியமாக விடுவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “எங்கள் குடும்பமே சிதைந்து கிடக்கிறது… லஞ்சம் வாங்கிவிட்டு குற்றவாளிகளை தப்பவிட்டு விட்டார்கள்…” எனப் பாதிக்கப்பட்ட தம்பதியின் மகன் கதறி அழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சைப் பிளந்து வருகிறது.
பணமும் அதிகார பலமும் இருந்தால் ஏழை குடும்பங்களுக்கு நீதியே கிடைக்காதா எனக் கேள்வி எழுப்பி, இச்சம்பவம் தொடர்பான வீடியோவை ஆந்திர மக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். தவறிழைத்த காரோட்டி மீது மட்டுமல்லாமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
