BREAKING: புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள் பிரிப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!

By Soundarya on மார்கழி 9, 2025

Spread the love
தமிழ்நாடு அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை மறுசீரமைக்கும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கியுள்ளது.
அதன்படி, உதகை மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன.
 உதகை ஊராட்சி ஒன்றியம் தற்போதுள்ள நிலையில் இருந்து மாற்றப்பட்டு, 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கும்.

குந்தா ஊராட்சி ஒன்றியம் புதிதாக உருவாக்கப்பட்டு, 12 கிராம ஊராட்சிகளைக் கொண்டிருக்கும். கூடலூர் ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டு, பந்தலூர் புதிய ஒன்றியமாக அமையும். இந்த மறுசீரமைப்பு குறித்த தங்கள் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் பொதுமக்கள் 6 வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.