கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் சந்திப்புக் கூட்டம் இன்று (டிசம்பர் 9) புதுச்சேரியில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த சந்திப்பில் எவ்வித அசம்பாவிதமும் நிகழக் கூடாது என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டி, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து தனது பிரார்த்தனையை நிறைவேற்றினார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், விஜய் அண்ணா விரைவில் தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்பதே தனது முக்கிய வேண்டுகோள் என்றும் அந்தத் தொண்டர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
