“அபார்ட்மெண்ட்  தோழி தான் காரணமா…?” கலிபோர்னியாவில் 2 மலையாளி பெண்கள் படுகொலை… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 1, 2026

Spread the love

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் பகுதியில் இரு மலையாளி பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் அதே அடுக்கக வளாகத்தில் வசித்து வந்த தங்கள் தோழியான மற்றொரு மலையாளிப் பெண்ணால் படுகொலை செய்யப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சான் ஜோஸ் நகரப் பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்தேகத்திற்குரிய அந்தப் பெண்ணைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து அமெரிக்கப் போலீசார்ன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் இரு மலையாளி பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா மற்றும் புலம்பெயர் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.